நவி மும்பையில் உள்ள சிற்றோடையில் ஏராளமான புலம்பெயர்ந்த ஃபிளமிங்கோ பறவைகள் ஒரே நேரத்தில் வந்துள்ளன.
கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து இந்தியாவுக்கு பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், 2ம் கட்டமாக மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக பறவைகள் மற்றும் விலங்குகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், கடந்த சில நாட்களாக பிளெமிங்கோ பறவைகள் இந்தியாவிற்கு வந்துள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரிக்கு இந்த பறவைகள் படையெடுத்துள்ளன.
மகாரஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 328 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3,648 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கிரேட்டர் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் மொத்தம் 184 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. புனேவில் புதிதாக 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.