மேஷம் ராசி அன்பர்களே …! இன்று சகோதரர்களால் லாபம் ஏற்படும். பிறருக்கு உதவக் கூடிய தியாக மனப்பான்மை இருந்தால் தயவுசெய்து கைவிடுவது ரொம்ப நல்லது. ஏனென்றால் இன்று மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்யும் பொழுது சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பெண்களின் அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பொது காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவருடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.
சிலருக்கு எந்த ஒரு விஷயத்திலும் நாட்டம் இல்லாமல் இருக்கும். தேவையில்லாத மனக் குழப்பமும் வந்து செல்லும். தொழில் வியாபாரத்தை பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஓரளவு சுமுகமாக இருக்கும். ஆனால் தனவரவு கிடைப்பதில் மட்டும் எப்பொழுதும் ஒரு கால தாமதம் இருக்கும் கவலைப்படாதீர்கள் அது கூடிய விரைவில் சரியாகிவிடும். எந்த ஒரு விஷயத்தையும் எச்சரிக்கையுடன் செய்வது ரொம்ப நல்லது.
இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளிடமும் அன்பு இருக்கும். காதல் வயப்பட கூடிய சூழலும் இன்று அமையும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் இல்லத்தில் வழிபடுங்கள் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் கருநீல நிறம்