கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவா மாநிலத்தில் கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு கட்சியின் ஆதரவோடு கோவாவில் பாஜக ஆட்சியை பிடித்தது. அம்மாநில முதல்வராக மனோகர் பாரிக்கர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோவா மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த M.L.A பிரான்சிஸ் டி சோசா புற்று நோயால் மரணமடைந்ததால் ஆளும் பாஜக கட்சியின் சட்டசபை உறுப்பினர் குறைந்துள்ளது .மேலும் அம்மாநிலத்தில் 2 இடங்கள் ஏற்கனவே காலியாக இருக்கின்றது . இதையடுத்து ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ளதால் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்று கோவா கவர்னருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது . அந்த கடிதத்தில் , கோவா மாநிலத்தில் பாஜக அரசை கலைத்து விட்டு தனிப்பெரும்பான்மையுடன் இருக்கும் காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும் , கோவா_வில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முயற்சி சட்டவிரோதமானது என்றும் கூறப்பட்டுள்ளது.