மிதுனம் ராசி அன்பர்களே : இன்று எந்த ஒரு விஷயத்தையும் தீர ஆலோசனை செய்து செய்வீர்கள் காதல் உணர்வு இன்று தலைதூக்கும் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் ஆதாயம் அடைய கூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான நாளென்றே இன்று சொல்லலாம். பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள். மற்றபடி முக்கிய பிரச்சனைகளில் வாயை கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம்.
இந்த விஷயத்தில் எப்பொழுதுமே மிதுன ராசிகாரர்கள் கடைப்பிடிக்க வேண்டும். புதிய முயற்சிகளையும் தவிர்க்க வேண்டும். கலைத்துறையினர் உழைப்பிற்கேற்ற பலனை அடையக்கூடும். உழைப்பு மட்டுமே நன்மையை கொடுக்கும் என்ற எண்ணத்தில் பணியாற்றுவீர்கள். இன்று எந்த ஒரு விஷயத்திலும் திருப்தியான சூழ்நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமான சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும்.
உங்களிடையே தொந்தரவு செய்தவர்கள் இன்று விலகி செல்ல கூடும்.கொடுக்கல் வாங்கல் கூட நல்லபடியாகவே நடந்து முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்