மகர ராசி அன்பர்களே… இன்று குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப அக்கறை கொள்ள வேண்டும்.காரிய வெற்றி எட்டாக்கனியாக தான் இருக்கும். கடுமையான உழைப்பு இருக்கும்.காரியங்களில் பயணங்களிலும் கொஞ்சம் தடை இருக்கும் உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் வேண்டும்.அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படக்கூடும்.
வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள் கூடுமானவரை பஞ்சாயத்துகள் ஏதும் நடந்து கொள்ளாதீர்கள்.தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி ஓரளவு சிறப்பை கொடுக்கும்.கூடுதல் லாபம் கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.சகோதர சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசி விடலாம் அவரிடம் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள்.உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
குடும்பத்தாரிடம் கோபப்படாதீர்கள் அவர்களிடம் வாக்குவாதம் ஏதும் செய்யாதீர்கள்.பண விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்து கொள்ளுங்கள் யாரிடமும் பணத்தை கடனாக தயவுசெய்து இன்று கொடுக்க வேண்டாம்.இன்று புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவதும் ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
அடர்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை:தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்:அடர் பச்சை மற்றும் நீல நிறம்