சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். சில விஷயங்களை நீங்கள் மற்றவர்களிடம் உரையாடும் பொழுது ரொம்ப பொறுமையாகவும் நிதானமாகவும் பேசவேண்டும். வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும் வீண் செலவுகளும் இருக்கும். பணமுடைவும் ஏற்படும். சிலருக்கு உடலிலும் மனதிலும் ஒரு நிலையற்ற தன்மை நிலவும். ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் முடித்து கொடுத்தாலும் பணவரவு தாமதமாகத்தான் வந்து சேரும் .
அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் பொழுது கவனமாக இருங்கள். தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும் ஓரளவு என்று செல்வம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் கடந்து தான் இன்று உழைக்க வேண்டியிருக்கும் யாருக்கும் இன்று வாக்குறுதிகள் ஏதும் கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப பொறுமையாக செல்ல வேண்டும்.
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் நிதானத்தை கடைபிடித்தால் சிறப்பை பெறலாம் . இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்