கன்னி ராசி அன்பர்களே …! இன்று திருமணம், நண்பர்களின் சந்திப்புஎன சின்ன சின்ன ஆசைகள் உங்களுக்கு நிறைவேறும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். அனைத்துமே இன்று ரொம்ப சுகமாக அமையும். கற்பனை உலகில் இன்று பயணிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல ஆதாயங்களை அடைய கூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதும் நல்லது.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு ஏற்படும். வீண் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது. முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பதவிகளை தக்க வைத்துக் கொள்வீர்கள். பல வழியிலும் பண வரவு வந்து சேரும். காரியத்தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதல் வயப்பட கூடிய சூழலும் அமையும். தொட்டது துலங்கும் நாள் ஆக இன்றைய நாள் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பு. கரும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை மற்றும் வெளிர் நீல நிறம்