கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி பரவியது என்பது குறித்து திடுக்கிடும் தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
சீனாவின் வுஹான் நச்சு உயிரியல் ஆய்வு மையத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் அங்கு பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவருக்கு முதன்முதலாக பரவியதாக கூறியுள்ளார். அங்கிருந்து வெளியே வந்த அவர் காய்கறி சந்தையில் அவரது காதலனை சந்தித்தார் எனவும் அவர் மூலமே மக்களுக்கு பரவியதாகவும் அதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் பிறப்பிடம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 5.2 மில்லியன் மக்கள் கொரோனோவால் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.