அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் சிரமப்படுவதோடு மட்டுமில்லாமல் அரசுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தில் மொத்தம் அரசின் 5,300 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த கடைகளால் நாள்தோறும் 100 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கின்றது.
தினந்தோறும் ரூ. 100 கோடி என மொத்தம் 21 நாட்களுக்கு கணக்கிட்டால் மொத்தம் 2,100 கோடி மதிப்பிலான மது விற்பனை பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. அந்த மதிப்பிற்கு சராசரியாக 80% கணக்கிட்டால் 1,680 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 17 நாட்களுக்கு மதுவிற்பனை பாதிக்கப்படுவதால் 800 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
இதனால், மொத்த ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் கடையின் வருவாய் இழப்பு 2,500 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும். ஆகவே வருமான இழப்பு மிகவும் அதிகமாக இருப்பதால், அவற்றை சரிசெய்வதற்கு அதிக வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது…