Categories
உலக செய்திகள்

கொரோனோவுக்கு மற்றோரு மருந்து… நம்பிக்கை கொடுக்கும் ரெம்டெசிவிர்…!!

கொரோனோவுக்கு மற்றோரு மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே ரெம்டெசிவிர் மருந்தும் நல்ல பலனைத் தருவதாக உலக சுகாதார நிறுவனமும், பல்வேறு நாடுகளும் தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியாவிற்கு கொடுக்கும் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.

கடுமையான காய்ச்சல், சுவாசக்கோளாறுகள் பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல பலனை கொடுத்தாலும் பெரும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் இதனை கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மிக கவனமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மாற்று மருந்து கொடுத்து ஆராயப்பட்டு வந்தது.

 

இந்நிலையில் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே    ரெம்டெசிவிர் மருந்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நல்ல பலன் தருவதாக அதனை சோதித்துப் பார்த்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவாரம் ரெம்டெசிவிர் மருந்தை கொடுத்தாலே நோயாளிகள் குணம் அடைவதாகவும் இதனால் 10 நாட்கள் வரை சிகிச்சை காலம் குறைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஹிலியாட் சைன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்த இந்த மருந்து எபோலாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு சிறந்த பலனை கொடுத்து அதன் அடிப்படையில் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது நல்ல பலனை தருவதாக கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள 152 சோதனை மையங்கள் கடுமையான வைரஸ் அறிகுறிகளுடன் உள்ள 2400 நோயாளிகளுக்கு ஹீலியட் நிறுவனம் இந்த மருந்தை அளித்து பரிசோதனை செய்து இருக்கிறது.

மேலும் உலகெங்கிலும் உள்ள 169 மருத்துவமனைகளில் மிதமான அறிகுறிகளுடன் உள்ள 1600 நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டு வருகிறது. எந்த பக்க விளைவுகளையும் கொடுக்காமல் நல்ல பலனை அளித்தால் விரைவில் ஹைட்ராக்ஸிக் குளோரோக்குவின் போலவே ரெம்டெசிவிர் மருந்தும் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |