Categories
உலக செய்திகள்

வேணும்னு பண்ணி இருந்திங்கனா – நீங்க அவ்வளவு தான் – டிரம்ப் எச்சரிக்கை ..!!

கொரோனவை சீனா வேண்டுமென்று பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்துள்ளார்.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது மக்களின் மன நிம்மதியை உலுக்கியுள்ளது. உலகிலேயே வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்கா கொரோனவால் சிக்கி சின்னாபின்னமாகி விட்டது. இது சீனாவில் உருவாக்கப்பட்டது என்றும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சிதைத்து சீனா முன்னேறுவதற்கு சீனா தொடுத்த உயிரியல் போர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், இது இயற்கையாக உருவானது அல்ல இது செயற்கையாக உருவாக்கப்பட்டது. சீனாவில் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூஷன் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த வைரஸ் அங்கிருந்து தப்பித்து வந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மேலும் இது தொடர்பாக அமெரிக்கா விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும், அந்த தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் பதிலளிக்கும்போது, கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கும் போது சீனா அதை தடுத்திருக்கலாம், ஆனால் தற்போது சீனா தடுத்து நிறுத்தாமல் விட்டதால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய தவறான ஒன்று. சீனா வேண்டுமென்றே வைரசை பரப்பி இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |