Categories
உலக செய்திகள்

மோடி எடுத்த முடிவு…. புகழின் உச்சியில் இந்தியா…. ஐநா சபையே பாராட்டுது …!!

கொரோனவை விரட்டிட ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கிய இந்தியாவுக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகுக்கே மரண பயத்தை காட்டிக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா வைரசுக்கு இன்றுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அதேவேளையில் கொரோனவை எதிர்த்து போராடி வரும் உலக நாடுகள்  அதற்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.அதே வேளையில் மலேரியாவை குணப்படுத்தும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனாவை கட்டுப்படுத்துவது என்று அறியப்பட்டுள்ளது.

இந்த மருந்தை இந்தியா தான் உலகிலே அதிகளவில் தயாரிக்கின்றது. கொரோனா வைரஸ் பரவியதும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவிடம் அமெரிக்கா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை கேட்டதாலும், உலகளவில் அனைத்து நாடுகளும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை நாடியுள்ளதால் மத்திய அரசாங்கம் உலக நாடுகளின் நலனை கருத்தில் கொண்டு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைக்கு விதித்திருந்த தடையை நீக்கியது.

இதனால் உலக நாடுகளுக்கு இந்தியா இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்து வருகிறது. சில நாடுகளுக்கு இலவசமாகவும் கொடுத்துள்ளது.  மொரீஷியஸ், செசல்ஸ் போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் அங்கு சென்ற நிலையில் இலங்கை,பிரான்ஸ், மியான்மர், எகிப்து, கஜகஸ்தான், கென்யா போன்ற நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் பெற இருக்கின்றன. இப்படி உலகளவில்  55 நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கியுள்ளது.

மனித குலத்துக்கே அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனாவை தடுத்து, விரட்டி அடிக்கவும், ஒழிக்கவும் உலக நாடுகள் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்று ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வேண்டுகோளை ஏற்றுத்தான் இந்தியாவும் பல நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மாத்திரைகளை வழங்கியுள்ளது. அதேபோல மற்ற நாடுகளும் இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றன.

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐநாவின் பொது செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஐநா சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

அதேபோல டொமினிகன் குடியரசுக்கு இந்தியா 2 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை நன்கொடையாக வழங்கியதற்கு அந்நாடு நன்றி தெரிவித்தது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை இந்தியா அனுப்பியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், நம்முடைய பாரத பிரதமர் மோடிக்கும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. ஹைட்ராக்சிகுளோரோகுயின்  வழங்கி உலகுக்கே முன்னுதாரணமான நாடாக  நம் இந்தியா உள்ளது நமக்கும் பெருமையே

Categories

Tech |