வியர்வை நாற்றத்தை போக்குவதற்கான வழிமுறை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
வெளியுலகை பொருத்தவரையில் ஒரு நபர் நம்மிடம் நெருங்கி பழக வேண்டும் என்றால், நம்முடைய புறத்தோற்றம், நாம் நடந்துகொள்ளும் விதம், உடல் தோற்றம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டே பலர் நம்மிடம் பழகுவர். அந்த வகையில், பெரும்பாலானோர் உடலின் வியர்வை நாற்றத்தைத் விரும்பமாட்டார்கள்.
உடலில் வியர்வை அதிகம் இருப்பவர்களிடமிருந்து சற்று விலகியே இருப்பார்கள். நெருங்கிப் பழகுபவர்களை கூட இந்த வியர்வை நாற்றம் முகம் சுளிக்க செய்துவிடும். இதிலிருந்து தப்பிக்க அரை மூடி எலுமிச்சை சாற்றை எடுத்து உடல் முழுவதும் குறிப்பாக வியர்வை வரும் இடங்களில் தேய்த்து குளித்தால் அன்றைய நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமலிருக்கும் அல்லது குளித்து விட்டு சிறிதளவு பஞ்சில் எலுமிச்சை சாற்றை நனைத்து வியர்வை வரும் இடங்களில் தேய்த்துக் கொள்ளலாம். வியர்வை நாற்றத்துக்கு வாசனை திரவியம் அடிப்பதை விட இது மிகச்சிறந்த தீர்வு.