Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி…. ஆனால் சில பொருட்களை மட்டுமே வாங்க முடியும்!

நாளை முதல் ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசு சில புதிய கட்டுபாடுகளை விதித்து அறிவித்துள்ளது.

இந்தியாவில் 15,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொழில்துறைக் கடுமையாக முடங்கியுள்ளது. இதில் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் அடக்கம். இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் சில நிபந்தனைகளுடன் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.

அதாவது ஆன்லைன் வர்த்தகத்திற்கு நாளை முதல் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் இணையதள வர்த்தகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை அத்தியாவசியமற்ற பொருட்கள் விற்பனைக்கான தடை தொடரும் என்று கூறியுள்ள மத்திய அரசு, அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அறிவிப்பில் ஆன்லைன் ஷாப்பிங்கில் பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அத்தியாவசியப் பொருட்கள் மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்து பொருட்கள் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதனால் முன்பு பிறப்பித்த உத்தரவில் மொபைல் போன், டிவி, லேப்டாப், ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவற்றை நாளை ஆர்டர் செய்ய முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. பொருட்கள் டெலிவரிக்குச் செல்லும் முன்பு உள்ளூர் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் டெலிவரி செய்யும் போது சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |