Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வண்டி தான வேணும்….. ரூ600 கொடுங்க….. வக்கீல் வேடமிட்ட வாலிபர் கைது….!!

சென்னையில் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி வக்கீல்  வேடமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைத் தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விடுகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாதவரம் பால்பண்ணை காமராஜர் நகரைச் சேர்ந்த 10 நபர்கள் வாகனமும் காவல்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அப்போது ஜெய சக்தி வடிவேல் என்ற நபர் நான் ஒரு வக்கீல். மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவல் உயர் அதிகாரிகளும் எனது நண்பர்கள்.

எனக்கு பணம் கொடுத்தால் நான் அவரிடம் பேசி உங்களுடைய வாகனங்களை வாங்கி தருகிறேன் என்று கூற, 10 பேரும் தலா ரூபாய் 600 வீதம் ஜெய சக்தி வடிவேல் என்பவரிடம் கொடுத்துள்ளனர். அதன்பின்பு அனைவரும் காலை 10 மணிக்கு காவல் நிலையம் வருமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். அதன்படி,

காவல் நிலையத்தின் மாடி வரை சென்று பின் திரும்பி வந்து காவல் துறை அதிகாரியிடம் பேசிவிட்டேன். உங்களது வாகனம் ஒரு மணிநேரத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்து நைசாக தப்பிக்க முயன்றார். அப்போது வந்த நபர் யார் எதற்கு வந்து சென்றார் என்று சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரிகள்,

அவரை நிற்கச்சொல்லி விசாரிக்கையில்,.அவர் வக்கீல் இல்லை என்பதும், காவல்துறை அதிகாரிகள் அவரது நண்பர்கள் என்று கூறி பணம் பறிக்க முயன்றதும்தெரியவந்த பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |