மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் இதய நோய், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்கான மருந்துகளை அதிகம் வாங்கி செல்வதாகவும்,
குறிப்பாக இன்சுலின் அதிகம் வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் கரூரில் காய்ச்சல் சளி இருமல் உள்ளிட்டவைகளுக்கு மருந்துகள் வழங்கப்படாது. அதிக காய்ச்சல் என்றால் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு ஆங்காங்கே உள்ள மருந்து கடைகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வழங்கப்படும் பரிந்துரை சீட்டு களின் அடிப்படையில் காய்ச்சல் சளி உள்ளிட்டவற்றிற்கு மருந்துகள் முகவரி மொபைல் எண் உள்ளிட்டவற்றை பெற்ற பின் வழங்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.