Categories
மாநில செய்திகள்

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகளில் மட்டுமே மீன்பிடித்துள்ளனர் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்., 15ம் தேதி முதல் மே 15ம் தேதி ஜூன் 15ம் தேதி வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்களில் 6 ஆயிரத்து 500 விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீன்பிடி தடை காலம் தொடங்கி நடைபெற்றுவருவதால் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி? என கமலஹாசன் நேற்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், தமிழக கடற்பகுதியில் நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடித்துள்ளனர், பன்னாட்டுக் கப்பல்கள் மீன்பிடிக்கவில்லை என கூறியுள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்களை திசைத்திருப்ப தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்

Categories

Tech |