Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொரோனாவால சாவு கிடையாது…. வழுக்கி விழுந்து தான் சாவு…. பொதுமக்கள் கடும் அவதி….!!

மதுரையில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் யூனியனான வேடர்புளியங்குளம் பகுதியில் 11/3 கோடியில் தார்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த வகையில் சாலைகள் ஆங்காங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன.

ஒரு மாதத்திற்கும் மேலாக தெருக்களில் ஆங்காங்கே குவியல் குவியலாக ஜல்லிக் கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியாக சென்று வர முடியவில்லை. மீறி செல்லும் பட்சத்தில் விபத்துக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் நடந்தே செல்லும் பட்சத்தில் கால் வலிக்கு சிலர் விழுந்துள்ளனர். மேலும் தண்ணி லாரி உள்ளிட்டவை ஜல்லி கற்கள் குவிக்கப்பட்டிருப்பதால் தெருக்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டு விடுகின்றன.

இதனால் பொது மக்கள் காலி குடங்களுடன் நடந்து சென்று தண்ணீர் பிடித்து விட்டு பின் மீண்டும் திரும்பி வரும்போது எப்போது தடுக்கி விழுவோமோ என்ற அச்சத்திலேயே நடந்து சென்று வருகின்றனர்.

இது போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் அவதிபடுவதால் ஊரடங்கிலிருந்து சாலைப் பணிகளுக்கு விலக்கு அளிக்கக் கோரியும், பணிகளை விரைந்து முடித்து சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |