தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா மிகவும் வேகமாக பரவிவந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கோரோனாவின் தாக்கம் குறைந்து, பின்னர் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 40ஐ கடந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,323 ல் இருந்து 1,372 ஆக அதிகரித்தது..
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரேநாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 365ல் இருந்து 411 ஆக அதிகரித்துள்ளது.. இந்த செய்தி மக்களுக்கு சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..