தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் இன்று தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று வரை1,372 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்து சென்றதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365திலிருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500யை நெருங்கி வருவது குறிப்பிடத்தக்கது.