தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று வரை1,372 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்து சென்றதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365திலிருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 285 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 300யை நெருங்குவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.