நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் அர்ச்சகர்கள், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 20 , காங்கிரஸ் 10 , சிபிஎம் 2 , சிபிஐ 2 , விசிக 2 , மதிமுக 1 , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 1 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 , இந்திய ஜனநாயக கட்சி 1 தொகுதியில் போட்டியிடுகின்றது . எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுகின்றார் என்ற வேட்பாளர் பட்டியலை இடதுசாரிகள் , மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அறிவித்து விட்டனர். இன்று திமுக_வின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் வெளியிடுகின்றார்.
இந்நிலையில் திமுகவிற்கு அடுத்தடுத்து பல்வேறு இயக்கங்கள் அவர்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சென்னை, அண்ணா அறிவாலயத்தில், அர்ச்சகர் சு.சீனிவாசன் தலைமையில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்த தமிழ் அர்ச்சகர்கள், நாடாளுமன்ற திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து கொண்டனர்.