Categories
உலக செய்திகள்

கொரோனா சீனர்களால் தயாரிக்கப்பட்டது – நோபல் பெற்ற அறிஞர் பகீர் தகவல் ..!!

எய்ட்ஸ் நோயை கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற அறிஞர் கொரோனா மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிசன் செய்தி ஒன்றை வெளியிட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

உலகம் முழுவதையும் அச்சத்தில் மூழ்கடித்து லட்சக்கணக்கானோரை மருத்துவமனையில் அனுமதிக்க செய்த கொடிய வைரஸ் மீதான குழப்பமும் சந்தேகமும் பல்வேறு நாடுகளிடம் எழுந்த நிலையில் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் கொரோனா தொற்று மனிதர்களினால் செயற்கையாக உருவாக்கப்பட்டு பரவியதாக பிரெஞ்சை  சேர்ந்த அறிஞர் லூக் மோன்தக்னேர் கூறியுள்ளார்.

எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்து 2008 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர் அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பொழுது வூஹானில் இருக்கும் ஆய்வுக்கூடத்தில் தற்செயலாக நடந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியதாகவும் இரண்டாயிரமாண்டு முதலில் இருந்தே சீனா இத்தகைய வைரஸ்களை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் காட்டு விலங்குகளிடமிருந்து வைரஸ் சந்தைக்கு சென்றதாக நான் சிறிதும் நம்பவில்லை என்று குறிப்பிட்டு அது ஒரு நல்ல புராணக்கதை என்றும் அவ்வாறு பரவுவது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளார்.

 

Categories

Tech |