Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு …நட்பால் நன்மை கிடைக்கும்…மனம் மகிழ்ச்சியாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே …! இன்று நட்பால் நன்மை கிட்டும் நாளாக இருக்கும் தன வரவு திருப்திகரமாக இருக்கும் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.  தொழிலில்  புதிய திட்டங்களைத் தீட்டி லாபத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.  இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.  மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். எதிலும் கவனமாக இருப்பது எப்பொழுதும் நல்லது.  ஏதேனும் மன கஷ்டம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சில் இனிமை, சாதுரியம் இவற்றால்  எடுத்த காரியம் எல்லாம் கைகூடும்.  பயணங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.  ஆன்மிகப் பணியில் நாட்டம் செல்லும்.

இறை வழிபாட்டுடன் இன்றைய நாளையும் தொடங்குவீர்கள்.  இன்றைய நாள் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவேநடக்கும்.

அதிர்ஷ்டமான  திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண்:  6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |