மிதுனம் ராசி அன்பர்களே...! இன்று நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அலுவலகப் பணிகளை அருகில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். உடல் நலமும் சீராகும். குடும்பத்தாருடன் குதூகலப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் மூலம் பெருமைகள் உண்டாகும்.
திறமையான செயல்களால் புகழும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள் மட்டும் அதிகரிக்கும். உற்றார் உறவினரிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத விஷயத்தில் தயவு செய்து நீங்கள் தலையிட வேண்டாம். இன்று பிள்ளைகளிடம் அன்பாக நடப்பது மிகச்சிறந்தது.
அவரிடம் தயவுசெய்து கோபத்தைக் காட்ட வேண்டாம். காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்