இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் சில நிபந்தனையுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் டுவிட்டரில் இன்று முதல் செய்லபடும் சேவைகள், தொழில்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,
நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை செயல்படும்.
மீன்பிடித் தொழில் தொடர்ந்து இயங்கும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும். இதில் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.
மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி.
ஆயுஷ் உள்பட அனைத்து மருத்துவ சேவைகள் செயல்படும்.
தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள், அதிகபட்சம் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம்.
வேளாண் மற்றும் தோட்டத் தொழில்களுக்கு அனுமதி.
பொது வினியோகத்துறை செயல்படும்.
அனைத்து மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள் செயல்படும்.
அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யலாம்.
வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்விக்கு அனுமதி.
கட்டிட தொழில்களை தொடர அனுமதி.
தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக இயக்கலாம்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்புகள் கொரோனா பாதிப்பில் அதிகமாக உள்ள (ஹாட்ஸ்பாட்) பகுதிகளுக்கு பொருந்தாது என்றும் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.