Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசி… புதிய முயற்சிகளை தள்ளிப் போடுவது நல்லது…வெற்றிக்கு துணை புரிபவர்கள் வீடு தேடி வருவார்கள்….

 

துலாம் ராசி அன்பர்களே… இன்று எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாகவே இருக்கும்.வெற்றிக்கு துணை புரிபவர்கள் வீடு தேடி வருவார்கள்.அடுத்தவர் நலனில் காட்டிய அக்கரைக்கு ஆதாயம் கிடைக்கும்.தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.இன்று உயர்வு தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பது குறிக்கோளாக செயல்படுவீர்கள்.

பணவரவு சீராக இருக்கும். மனக்கவலை தீரும்.எடுத்த காரியத்தை திருப்தியுடனும் செய்து முடிப்பீர்கள்.விபரீத ஆசைகள் தோன்றும் பார்த்துக்கொள்ளுங்கள் கவனமாக இருங்கள்.வாகனம் மூலம் லாபம் இருக்கும்.அரசாங்க தொடர்பான காரியங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கொஞ்சம் கவனமாகவே இருங்கள்.

புதிய முயற்சிகளில் கொஞ்சம் தள்ளிப் போடுவது ரொம்ப நல்ல.இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.காதலில் முன்னேற்றம் இருக்கும்.புதிதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |