விருச்சிக ராசி அன்பர்களே…இன்று பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் நாளாகவே இருக்கும்.உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.உற்றார் உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள்.இன்று புதிய ஆர்டர் தொடர்பாக காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும்.
வியாபாரப் போட்டிகள் குறையும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உறவினர் வருகை இருக்கும்.திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுகள் நடக்கும். நிலம் வீடு மூலம் லாபம் கிடைக்கும்.கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும்.
இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி வாய்ப்புகள் இருக்கும்.காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்