சிம்மம் ராசி அன்பர்களே …! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். ஆனால் நீங்கள் யாருக்கும் இன்று வாக்குறுதிகள் மட்டும் கொடுக்க வேண்டாம். மிக முக்கியமாக ஜாமீன் கையெழுத்து ஏதும் போடவேண்டாம். வாழ்க்கை தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக தான் இருக்க வேண்டும். உடன் பிறப்புகளால் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ளகொஞ்சம் முன்வருவீர்கள். உங்களுடைய சிந்தனை திறன் இன்று முன்னேறும். கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பஞ்சாயத்துக்களில் தயவுசெய்து கலந்து கொள்ள வேண்டாம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவரிடம் பேசும் பொழுது கோபம் தலைதூக்கும். தேவை இல்லாத விசயத்திற்கு கோபப்பட வேண்டாம் . இன்று உங்களுக்கு சந்திராஷ்டம் தினம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். பேச்சின் இனிமை சாதுரியத்தால் சில விஷயங்களை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள். சில விஷயங்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. மிக முக்கியமாகஉயர்ந்த அதாவது விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும்.
தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரிடும். கொடுக்கல்-வாங்கலில் இன்று முற்றிலும் தவிர்க்க வேண்டும். தயவுசெய்து தேவைக்காக பண கடன் மட்டும் பெற வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையயே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்