சென்னையில் அமைப்புசாரா தொழிலார்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.
சென்னை நேரு பூங்கா குடிசை மாற்று வாரிய பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 300 பேருக்கு மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் L.முருகன் கலந்துகொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மோடி கிட் எனப்படும் பாதுகாப்பு சாதனங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஊரடங்கு காலத்தில் யாரும் உணவின்றி தவிக்க கூடாது என்பதற்காகவே உணவுப் பொருட்கள் மற்றும் உணவை மாநிலம் முழுவதும் விநியோகித்து வருவதாகவும். இத்தருணத்தில் களத்தில் இருக்கும் மருத்துவர்கள், காவலர்கள், அரசு ஊழியர்கள், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.