54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக கொரோனா தொற்று இல்லை என்று சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் மாஹே மாவட்டத்திலும், கர்நாடக மாவட்டம் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில் தினசரி நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் திரு லாவ் அகர்வால் கொரோனா சிகிச்சை தொடர்பான தகவல்களைத் தருவது வழக்கம்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் மாஹே மாவட்டத்திலும், கர்நாடகாவில் குடகு மாவட்டத்தில் கடந்த 28 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று கோவா மாநிலம் முழுவதும் கடந்த மூன்றாம் தேதியிலிருந்து புதிய கொரோனா பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர் ஒரு கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் நள்ளிரவு முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களாக புதிய கொரோனா தொற்று இல்லை என தெரிவித்துள்ளார்.