Categories
உலக செய்திகள்

சீனா ஆய்வு கூடம்… லீக்கான கொரோனா… அதிர்ச்சி தரும் தகவல்..!!

சீனா ஆய்வு கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என உலக நாடுகள் சந்தேகின்றனர்.

சீன விஞ்ஞானிகள் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வின் போது தவறுதலாக கொரோனா வைரஸை உருவாக்கியிருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு பெற்ற பிரான்ஸ் நாட்டு அறிஞர் லூக்மோன் தஃதெத் இத்தகவலை கூறியிருக்கிறார்.

வூஹானில் உள்ள தேசிய பயோ சேப்டி ஆய்வுக் கூடத்தில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் கொரோனா வைரஸ் வெளியாகியது என்பது இவரின் குற்றச்சாட்டு. 2000 ஆம் ஆண்டிலிருந்து சீனா இந்த ஆய்வை மேற்கொண்டு வருவதாகவும் இவர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை பயோ சேப்டிக் ஆய்வு கூடம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ஆய்வுகூடத்தில் பணிபுரியும் ஒருவர் கூட அந்த வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்கும் சீனா, அரசியல் லாபத்திற்காக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது. தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளை சீனா தொடர்ந்து மறுத்து வந்தாலும் உலக நாடுகளின் சந்தேகப்பார்வை அந்நாட்டை விட்டு விலகவில்லை.  கொரோனோவை சீனா திட்டமிட்டு உருவாக்கியதா என்று அமெரிக்காவும் ஒரு பக்கம் விசாரணையை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |