முகம் வசீகரமாக இருக்க எளிமையான சில அழகு குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.
1. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி கை விரல்கள், மட்டும் கால்விரல்கள் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
2. துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மேல் பூசி வந்தால் முகப்பருக்கள் குறைந்துவிடும்.
3. மா மரத்தின் இலையை எடுத்து அதன் பாலை கால் வெடிப்பில் பூசி வந்தால் கால் வெடிப்பு குறையும்.
4. பாதாம் எண்ணெயுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து, முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் சிறிது சிறிதாக குறைந்து விடும்.
5. பாலாடை, குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து விடும்.
6. ரோஸ் வாட்டர் கொண்ட கலவையை உதடு வெடிப்பின் மீது பூசி வந்தால் வெடிப்புகள் மறைந்து உதடுகள் மென்மையாக மாறிவிடும்.
7. எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து விடும்.
8. பாதாம் பருப்புகளை சிறிதளவு பால் சேர்த்து அரைத்து கண்களை சுற்றி தடவி வந்தால் கண்கள் சுற்றி இருக்கும் கருவளையம் மறையும்.
9. தினமும் இரவில் புருவங்களில் ஆலிவ் எண்ணெயை தடவிக் கொண்டு படுத்தால் புருவங்கள் மிருதுவாகவும், வசீகரமாகவும் மாறிவிடும்.
10. தர்பூசணி பழச்சாறு,பயத்த மாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புத்துணர்வு பெறும்.
11. பீட்ரூட் உதட்டில் அடிக்கடி அழுத்தித் தேய்த்து வந்தால் உதடுகள் சிவப்பாக இருக்கும்.
12. தர்பூசணி பழத்தின் அடியில் இருக்கும் வெள்ளை பகுதியினை காலில் தேய்த்தால் கால்கள் மிருதுவாக மாறிவிடும்.
13. அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் கடினத்தன்மை குறையும்.
14. தினமும் காலையில் தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் பளபளப்பாக இருக்கும்.
15. மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைச்சாறை தலையில் தேய்த்தால் முடி உதிர்வது குறைந்து விடும்.
16. கசகசாவை சிறிது எடுத்து பாலில் ஊறவைத்து அதை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை குறையும்.
17. சந்தனத்தை நன்றாக பொடியாக்கி அதோடு பன்னீர் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும்.
18. வெள்ளரிக்காயும் சேர்ந்து அரைத்து கருவளையத்தின் மீது தடவி வந்தால் கருவளையங்கள் மறைந்துவிடும்.