இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 17,265 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. 2547 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ராஜஸ்தானில் புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,495ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 205 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் உத்தரபிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குஜராத்தில் புதிதாகா 108 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,851ஆக உயர்ந்துள்ளது. குஜராத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 106 பேர் குணமடைந்துள்ளனர்.