Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING: 80% அறிகுறி இல்லாமல் கொரோனா…. இந்தியாவில் ஷாக் …!!

80 சதவீதமானோருக்கு கொரோனா அறிகுறி இல்லாமலே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கொரோனா அறிகுறி இல்லாமலே அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் டெல்லியில் 186 பேருக்கு புதிதாக கொரோனா வந்ததில் யாருக்கும்  கொரோனா அறிகுறியான சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.

இதே தகவலை தான் தற்போது ஐ.சி.எம்.ஆர் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள 80 சதவீதமானவர்களுக்கு கொரோனா அறிகுறிகளே இல்லாமல் இருக்கிறது என்று தெரிவித்தார்கள். இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

ஏனென்றால் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தால் மட்டும் தான் அவருக்கான பரிசோதனை நடைபெற்று வருகின்றது. ஆனால் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறைந்த எண்ணிக்கையில் அல்ல மொத்த எண்ணிக்கை 80 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் கொரோனா ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கின்றார்.

Categories

Tech |