Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டுக்கு வழியில்ல… ராஜநாகத்தை வெட்டி ருசி பார்த்த நபர்கள்..!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில்  சாப்பிட அரிசி இல்லாத காரணத்தால் காட்டுக்குள் சென்று பெரிய ராஜநாகத்தை வேட்டையாடி வெட்டி சமைத்து சாப்பிட்ட கொடூர சம்பவம்  அரங்கேறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் பசியால் தவித்து வரும் நிலையில், உயிரினங்களை வேட்டையாடும் நிலைக்கு சிலர் சென்று விட்டனர்..

அதாவது, அருணாச்சல பிரதேச மாநிலத்தில்  நிறைய விஷ தன்மையுள்ள பாம்பு இனங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.. அம்மாநிலத்தில் 3 வேட்டைக்காரர்கள் 12 அடி நீளமுள்ள விஷமுடைய ராஜநாகத்தை கொன்று தங்களின் தோள்களில் வைத்துள்ளது போலவும், அதனை சமைத்து சாப்பிடுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ ஓன்று வைரலாக பரவியது.

அந்த வீடியோவில், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படடுத்தப்பட்டுள்ளதால், தங்களிடம் சாப்பிட அரிசி இல்லை எனவும், அதனால் நாங்கள் காட்டுக்குள் ஏதாவது கிடைக்குமா என்று தேடி சென்றோம், அப்போது ராஜநாகத்தை பார்த்தவுடன், அதனை பிடித்து கொண்டு வந்தோம் எனவும் பேசிக்கொள்கின்றனர்.

மேலும், அவர்கள் ராஜநாகத்தை துண்டு துண்டாக நறுக்கி சுத்தம் செய்ய வாழை இலைகளை வைப்பது போலவும் வீடியோவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ராஜநாகத்தை வேட்டையாடிய 3 பேர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்கு பதிவு கீழ் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அவர்கள் பாதுகாக்கப்பட்ட ஊர்வன சட்டத்தின் கீழ் உள்ள ராஜநாகத்தை வேட்டையாடுவது  ஜாமின் வழங்க முடியாத குற்றம் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |