பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல 20ஆம் தேதி (இன்று முதல் ) சில தளர்வுகள் விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியீட்டு இருக்கின்றது. குறிப்பாக நேற்று நள்ளிரவு முதல் சில மத்திய உள்துறை அமைச்சகம் ஊரகப் பகுதியில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் இயங்கிக் கொள்ளலாம், விவசாயம் சார்ந்த முக்கியமான தொழிற்சாலைகளில் சில இயங்கலாம் என்று சொல்லி இருந்தார்கள்.
இந்நிலையில் டெல்லி மாநில முதல்வர், அங்குள்ள 7 மாவட்டங்களிளும்மே மூன்றாம் தேதி வரை தொடரும், மே 3-ம் தேதி வரை தொடர்ச்சியாக மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் சொல்லி இருந்தார். அதே போல தற்போது பஞ்சாப், கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில்தான் காவல்துறை அதிகாரி கொரோனாவில் உயிரிழந்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஏராளமான உயிரிழப்புகள் அங்கு கடந்த சில நாட்களாக பதிவாகி வரக் கூடிய நிலையில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்பதை அறிவித்துள்ளார்கள்.அதே போல கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை பெங்களூர் உள்ளிட்ட சில முக்கியமான பகுதிகளில் கடுமையான கொரோனா தொற்று இருக்கின்றது.
எனவே ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி, கொரோனா அதிகம் பரவ வழிவகை செய்துவிட கூடாது என்று அவர்களும் ஊரடங்கில் தளர்வு இல்லை என்று முடிவு எடுத்து இருக்கின்றார்கள்.இது தவிர உத்ரகாண்ட் மாநிலமும் அரசு அலுவலகங்கள் கூட மே 3 வரை இயங்காது என தெரிவித்துள்ளார்.