10ஆம் வகுப்பு தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைசர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்த உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறுமா ? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும், ஆல் பாஸ் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழக முதலமைச்சரும் விளக்கம் அளித்திருந்தார்.
குறிப்பாக பத்தாம் வகுப்பு தேர்வானது முக்கியமானது, இதை நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பத்தாம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடைபெறும். மே மாதம் மூன்றாம் தேதிக்கு பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.