அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று மாலை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளயது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட வாக்குபதிவில் ஏப்ரல் 18_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது . நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் போதே தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள் சூடுபிடித்து உள்ளது .
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் அதிமுக 20 , பாஜக 5 , பாமக 7 , தேமுதிக 4 , புதிய தமிழகம் 1 , புதிய நீதி கட்சி 1 , தமாக 1 , N,.R காங்கிரஸ் ( புதுச்சேரி ) தொகுதியிலும் போட்டியிடுகின்றது என்று தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று சென்னை கிரவுண்ட் பிளாசா ஹோட்டலில் அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதையடுத்து இன்று மாலை 3 மணிக்கு அதிமுக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.