தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து. அதோடு ஏப்ரல் 20ஆம் தேதி ( இன்று முதல் ) ஊரடங்கில் சில விஷயங்கள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான சில அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. இதனால் தமிழகத்திலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாநில அரசு தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை, மே 3ஆம் தேதி ஊரடங்கு தொடரும் என்று முதல்வர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியிருப்பதால் மாநில பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்து இருக்கிற மே 3ஆம் தேதி வரி தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதில் அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் என்றும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.