Categories
தேசிய செய்திகள்

கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா பாதிக்காத மாவட்டங்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

புதுச்சேரியில் மஹே, கர்நாடகாவின் கோடகு மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி கர்வால் ஆகிய பகுதிகளில் கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். குடும்பநல அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டது.

அப்போது பேசிய லாவ் அகர்வால், கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை நாடு முழுவதும் 2,302 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேபோல, கடந்த 14 நாட்களில் எந்தவொரு கொரோனா வழக்கும் பதிவு செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இன்று கோவா கோவிட் -19 அல்லாத மாநிலமாக திகழ்கிறது” என அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு பேசிய உள்துறை அமைச்சக செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா, ” மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று கேரள அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து கேரள அரசு எடுத்திருக்கும் முடிவு தொடர்பாக எழுதப்பட்டுள்ளது. மேலும்,

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களை மீறும் சில நடவடிக்கைகளில் கேரளா இறங்கியுள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, ” ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, கோடைகால பயிர்களின் விதைப்பு பகுதி கணிசமாக அதிகரித்துள்ளது என வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டை விட 36% பயிர் சாகுபடி அதிகரித்துள்ளது. முக்கியமாக நெல் சாகுபடியால் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |