தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சற்று குறைவது போல தெரிந்தது.. ஆனால் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ல் இருந்து 1,477 ஆக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இன்று தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,477 ல் இருந்து 1,520 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒரேநாளில் 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ல் இருந்து 457 ஆக அதிகரித்துள்ளது” என்றார். இந்த செய்தி மக்களுக்கு சற்று மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது..