பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான செய்தி மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் தங்கள் கடமை அழைப்பில் கலந்து கொள்ளும்போது, தயவுசெய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள், சமூக விலகலின் விதிமுறைகளைப் பின்பற்றுங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அத்தியாவசிய கடைகள் போன்று, உடனடி செய்திகளை மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் அனைத்து ஊடங்கங்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக பத்திரிகையாளர்கள் வெளியில் பயணித்து வருகின்றனர்.
இதை நிலையில், சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்க்கும் பத்திரிகையாளர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பேசிய லாவ் அகர்வால், ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னர் கொரோனா பரவளின் இரட்டிப்பு விகிதம் 3.4 நாட்களாக ஆக இருந்தது. தற்போது 7.5 நாட்களாக முன்னேறியுள்ளது என தெரிவித்தார். அதேபோல, ஏப்ரல் 19ம் தேதி பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 18 மாநிலங்களில் இந்த பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட குறைவாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.