Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு – இறந்தவர்களின் இறுதிச்சடங்கு…இம்முறைகளிலே நடக்கும்..!!

கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் இறுதிச்சடங்கு இந்த முறைகளின் அடிப்படையில் தான் நடைபெறும்.

கொரோனா பாதித்த ஒருவர் உயிரிழந்த உடனேயே உடலில் உள்ள அனைத்து துவாரங்களும் அடைக்கப்படும். உடலில் உள்ளே இருந்து எந்தவித திரவமும் வெளியேறாமல் தடுப்பதற்காக துவாரங்கள் அடைக்கப்படுகின்றன. பின்னர் உடலின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும். உயிரிழந்தவரின் உடலை ஒரு பாலிதீன் கவரில் சுற்றி வைத்து அதன் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

பின்னர் தண்ணீர் உள்ளே போகவும், வெளியேறவும் முடியாத வகையிலான தடிமனான தன்மை கொண்ட டபுள் லேயர் கவரில் உடல் சுற்றப்படும். இந்த கவரின் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் உயிரிழந்த 2 மணி நேரத்திற்குள் செய்து முடித்தாக வேண்டும். பின்னர் அரசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் தலைமையில் பிரத்தியேக ஆம்புலன்சில் உடல் ஏற்றப்படும்.

இந்த நடைமுறைகளை செய்பவர்கள் அனைவரும் PPE கிட் எனப்படும் பிரத்யேக பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தபடி செய்வர். உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்கள் ஐந்து அல்லது ஆறு பேர் வரை கலந்து கொள்ளலாம். இறுதி சடங்கு செய்யும் இடத்திற்கு சென்ற பிறகு தங்கள் மத வழக்கப்படி அவர்கள் சடலத்தை வைத்து வணங்கலாம். ஆனால் சடலத்தின் மீது தண்ணீர் தெளிப்பதற்கும், தொடுவதற்கு அனுமதி இல்லை.

உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கின்போது இடுகாட்டில் உள்ள அனைவருக்குமே முழுமையான பாதுகாப்பு தரப்படும். உயிரிழந்தவரின் உடலை அவரவர் மத வழக்கப்படி புதைக்கலாம் அல்லது எரிக்கலாம். பாலிதீன் கவர்களுக்குள் சுற்றப்பட்ட சடலத்தை தாண்டி கிருமி வராது என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. சடலத்தை அளிப்பதாக இருந்தாலும் காற்றின் வழியாக கிருமி பரவாது.

Categories

Tech |