தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பத்திரப் பதிவுத் துறைக்கு 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பாண்டில் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு செயல்பட்டு வந்த பத்திர பதிவுத் துறைக்கு, ஊராடங்கால் இதுவரை 600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இன்று முதல் பத்திர பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் 150 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் என்று பத்திரபதிவுதுறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.