மேஷம் ராசி அன்பர்களே …! இன்று திருமண சுப காரியங்கள் பேச்சுகளில் சாதகமான பலன் இருக்கும். உடன்பிறப்புகள் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார் ,உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பது நன்மையே தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மிகுதியாகவே கிடைக்கும். அதனால் மன மகிழ்ச்சி இருக்கும். உடல் ஆரோக்கியமும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். பிள்ளைகளிடமும் அன்பாகவே நடந்து கொள்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் இன்று சிறப்பாகவே செய்வீர்கள்.
காதலர்களுக்கு இன்று இனிய நாளாகவே அமையும். காதலில் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்