மிதுனம் ராசி அன்பர்களே : இன்று கொடுக்கல்-வாங்கல்கள் திருப்திகரமாக அமையும். கமிஷன், ஏஜென்சி போன்ற துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் லாபமும் ஏற்படும். இதனால் பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்றமுடியும். புதிய வண்டி வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்குங்க. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பலவிதத்திலும் உதவிகளை செய்வார்கள். உறவினர் வருகை இருக்கும். அவரிடம் நிதானமாகப் பேசுங்கள். அனுபவபூர்வமான அறிவுத்திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தடபுடலாக நிறைவேறி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு தொலை தூரங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்துசேரும்.
உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும் காதலர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்