Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு …மன தைரியம் கூடும் …சிந்தனையுடன் செயல்படுவீர்கள் …!!

கடகம் ராசி அன்பர்களே…! இன்று பெரிய தொகைகளை கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காண முடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெற முடியும்.  நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள்  சிறப்பாகவே  முடியும். வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பிரச்சனைகள் எழலாம் கவனமுடன் இருப்பது முக்கியம். கிடைத்த வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்துங்கள்.

திருமண முயற்சிகள் கைகூடும் நேரம் கிடைக்கும். பொழுது ஓய்வு அவசியம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது ரொம்ப நல்லது. அப்படி செய்தால் தான் கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். இன்று எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசியுங்கள் யோசித்து  காரியத்தைச் செய்யுங்கள். மனோதைரியம் இன்று சிறப்பாகவே இருக்கும்.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகவே  இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டதிசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |