Categories
தேசிய செய்திகள்

ரொம்ப போர் அடிச்சது…! ”சாமிய பாக்க கிளம்பிட்டேன்” – 250 கி.மீ., பயணம் செய்த அமைச்சர் …!!

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தும் 250 கி.மீ., தூரம் பயணம் செய்து  அமைச்சர் சாமியாரை பார்க்கச் சென்றது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பல கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றது. மக்கள் சமூக விலகலை பின்பற்றுவதற்கு ஏதுவாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றன. வேலை வாய்ப்பை தேடி பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் கூட சொந்த மாநிலங்களுக்கு திரும்பாத நிலை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் தான் சத்தீஸ்கர் மாநிலத்தின் வணிகவரித்துறை அமைச்சர் கவாசி லக்மா சாமியாரை சந்திப்பதற்கு 250 கிலோ மீட்டர் பயணம் செய்து பயணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூரில் இருந்து 250 கிலோமீட்டர் பயணம் செய்து ராய்காரின் கோஷம்னாரா ஆஷ்ரமத்தில் உள்ள பாபா சத்யநாராயணா என்ற சாமியாரை இவர் பார்க்கச் சென்றுள்ளார். இதனால் இவர் தங்குவதற்காக ஊரடங்கால் மூடப்பட்டிருந்த மூன்று நட்சத்திர ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய கவாசி லக்மா, கொரோனா வைரசால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு வீட்டில் இருக்க மிகவும் சலிப்பாக இருக்கிறது, எந்த ஆலோசனைக் கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை.

ராய்காரில் சில இடங்களில் அரசின் விதிகளை மீறி மதுபானம் விற்பனை செய்ததாக எனக்கு புகார் வந்தது. அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் திடீரென அங்கே கிளம்பினேன். வருகின்ற வழியில் தான் ஆசிரமம் உள்ளதால் அங்கு சென்று சாமியாரை பார்க்க என்று எண்ணி கொண்டு அங்கு சென்ற போது எனக்கு கொரோனா இருப்பதால் சாமியாரும் என்னை பார்க்க மறுப்பு தெரிவித்தார்.ஊடகமும் இதை பெரிதுபடுத்த வேண்டாம். மக்களைப் பாதுகாப்பது மட்டுமே எங்களின்  குறிக்கோள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |