Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகள் மீதான பார்வையை மாற்றுங்கள், கனவை தூசிதட்டி எடுங்கள் – கமல்ஹாசன்

கொரோனா வைரஸ் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியுள்ளது என கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அமைப்பு சாரா தொழிலாளர்களை முறைப் படுத்துவது என்பது தேசிய நடவடிக்கையாக அரசு ஆரம்பிக்க வேண்டிய முக்கியமான பணி. உத்தரவாதமின்றி உழைக்கும் அவர்களுக்கு இது தான் முன்னேற்றத்தின் வழி. அப்போதுதான் வருமான வரி செலுத்துபவர்கள் எண்ணிக்கையும், வரிப்பணத்தையும் இது அதிகப்படுத்தும்.அந்த நிதி மீண்டும் அவர்கள் நல்ல திட்டங்களுக்கு, அதன் கட்டமைப்பை தரம் உயர்த்துவதற்கு பயன்படுத்தலாம்.

அதே நேரத்தில் வீட்டுக்குள் அயராது உழைக்கும் இல்லத்தரசிகள் மீதான நம் சமூகப் பார்வையும் கண்டிப்பாக மாறவேண்டும். வீட்டின் வேலைகளும் பொருளாதாரத்துக்கு முக்கியமான வேலை தான் என்று அவர்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். செலவினங்கள் போக மீதம் இருக்கும் மிககுறைந்த வங்கி சேமிப்பை தங்கள் சாதனையாக வைத்திருக்கும் இல்லத்தரசிகளுக்கு வீட்டில் அவர்கள் செய்யும் வேலைக்கு ஊதியம் என்பது அவர்கள் செய்யும் சேமிப்பை உறுதி செய்யும். சேமிப்பு என்பது எல்லா வகையிலும், நெருக்கடி நேரங்களில் உதவக்கூடியது.

நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் வருமான சமத்துவமின்மை  கோரமுகத்த்தின் விளம்பரங்கள். குப்பை தொட்டியில் கிடைக்கும் அழுகிய பழங்களை எடுத்து உண்ணும் நிலையில் அவர்களை கொண்டு சென்று இருப்பது நம் சமுதாயத்தின் தவறு. நம் நாட்டின் பொருளாதாரத்தில் 77 விழுக்காடு சொத்துக்கள் 10 விழுக்காடு மக்கள் கையில் உள்ளது. இந்த சமத்துவமின்மை சரிசெய்யப்பட வேண்டும். பெரும் பணக்காரர்களை அவர்கள் சொத்துக்களை பறித்து அதை சரிசெய்யக்கூடாது. அடித்தட்டில் இருக்கும் மக்களின் பொருளாதார நிலையினை புரட்சிகரமான பொருளாதாரத்தில் திட்டத்தினால் வலுப்படுத்தி அவர்கள் வாழ்க்கை நிலையை உயர்த்துதால் மட்டுமே அது சரி செய்யப்படவேண்டும் என்பது நடந்ததை அறிந்து செயல்பட வேண்டும் நடக்கும்.

நிவாரண உதவி என்பது நடந்த தவறுகளை எதுய்க்கட்டும் முயற்சிதான் என்பதை புரிந்து செயல்படவேண்டும். ஒரு புறம் மனித ஒரு புறம் மனித இனத்துக்கு மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் கொரோனா வைரஸ், மறுபுறம் இந்தியாவிற்கு கடந்தகால தவறுகளை திருத்திக்கொண்டு வளர்ந்த நாடாக முன்னேற்றும் பெரும் வாய்ப்பையும் நமக்கு வழங்கியிருக்கிறது.

கமலஹாசன் ஆகிய நான் வளமான வாழ்க்கை எல்லோருக்கும் என்ற நிலைப்பாட்டுடன், தனிமனிதனின் சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் புரட்சிகரமான திட்டத்துடன் எனது சொந்த மாநிலமான தமிழகத்தை புனரமைக்க உறுதி கூறுகிறேன். வல்லரசு என்ற இந்தியாவின் பல்லாண்டு கனவை தூசிதட்டி எடுத்து அதை நோக்கி பயணிக்கும் நேரம் இது என்று கமல் தெரிவித்துள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1252091531403517958

Categories

Tech |